நமது காது, மூக்கு மற்றும் தொண்டை நமது உணர்ச்சி உள்ளீட்டுக்கும் மற்றும் நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பார்க்கவும் கேட்கவும் அறியவும் குறிப்பிடத்தக்க அளவு பங்களிக்கிறது இது கேட்டல், வாசனை நுகர்தல் மற்றும் சுவைத்தல் ஆகிய மூன்று முக்கிய உணர்வுகளை உள்ளடக்கியது.
பொதுவாக ஈஎன்டி என அழைக்கப்படும் இது, உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே முக்கியமானவையாகும். எனினும், ஈஎன்டி என்பது வெறுமென காது, மூக்கு மற்றும் தொண்டை மட்டும் சம்பந்தப்பட்டதல்ல. இது குரல்வளை, தைராய்டு, டெம்போரோமாண்டிபுலர் மூட்டுகள் , பரணசால் சைனஸ்கள் மற்றும் பல உட்பட அவர்களைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
இவை மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படும் உறுப்புகள் என்பதால், ஒரு காது, மூக்கு, தொண்டை நிபுணர் (ஈஎன்டி நிபுணர்) என்பவர் இந்த மூன்று முக்கிய பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பவராவார்.
நாம் காணும் சில பொதுவான ஈஎன்டி பிரச்சினைகளாவன, விழுங்குவதில் பிரச்சினைகள், சைனஸ், குரல் நாண் பிரச்சினைகள், நாள்பட்ட காது, மூக்கு அல்லது தொண்டை தொற்று மற்றும் குறட்டைவிடுதல். மேற்கூறிய ஏதேனும் உடற்பிரச்சினைகள் மற்றும் அவசரநிலைகளுக்கு சிகிச்சையளிக்க எங்கள் இஎன்டி மருத்துவர்கள் நன்கு அனுபவம் பெற்றுள்ளனர்.
ஆம்பூரில் உள்ள சிறந்த ஈஎன்டி மருத்துவமனை கே.எம்.என்.யு மருத்துவமனைகளாகும், இது மற்ற சிறப்பு சேவைகளுடன் கூடுதலாக, அதன் அற்புதமான ஈஎன்டி பராமரிப்புக்காக இம்மருத்துவமனை பெரிதும் பாராட்டப்படுகிறது. ஈஎன்டி பிரிவில் உள்ள ஒரு அனுபவமிக்க குழுவின் ஒரு அங்கமாக சில மிகச் சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த ஈஎன்டி மருத்துவர்கள்
உள்ளனர். ஒரு தீர்வு கண்டுபிடிக்க பிரச்சனையின் அடிப்படைக் காரணத்தை கண்டறியும் தங்கள் திறன்களுக்கு கூடுதலாக, நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் பராமரிப்பு வழங்குவதில் மேம்பட்ட தொழில்நுட்பம் பயன்படுத்துவதில் எங்கள் ஈஎன்டி நிபுணர்கள் அதிக அனுபவம் கொண்டுள்ளனர்.
இந்த மருத்துவமனையில் அனைத்து நவீன நோயறிதல், சோதனை மற்றும் அறுவை சிகிச்சை சாதனங்கள் உள்ளன, இது மன வேதனையில் இருக்கும் நோயாளிகளுக்கு சிறந்த மருத்துவ உதவியை விரைவாக வழங்க உதவுகிறது.
மேலோட்டமாக பார்த்தால், ஈஎன்டி பிரச்சினைகள் அந்த அளவுக்கு முக்கியமானதாக தெரியாது, ஆனால் இப்பிரச்சனைகளைத் நிராகரிக்கும்போது, அவைகள் பல உறுப்புகளும் செயலிழக்க வழிவகுக்கும் தீவிர பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகள் பொதுவாக காது, மூக்கு மற்றும் தொண்டையை பாதிக்கின்றன. கூடுதலாக, தைராய்டு மற்றும் தொண்டைச்சதை அழற்சி போன்ற நிலைமைகளுக்கு சிறிய அறுவை சிகிச்சைகள் தேவைப்படலாம்.
கே.எம்.என்.யு மருத்துவமனைகளில் உள்ள எங்கள் நிபுணத்துவம் பெற்ற ஈ.என்.டி மருத்துவர்கள் காது நோய்த்தொற்றுகள் , ஒவ்வாமைகள் முதல் புற்றுநோய்கள் வரையிலான ஈஎன்டி தொடர்பான மிகவும் சிக்கலான நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் நல்ல அனுபவசாலிகளாவர். காது மற்றும் நாசி புற்றுநோய் அரிதானது என்றாலும், தொண்டை புற்றுநோய்கள் குறிப்பாக அடிக்கடி புகையிலை மெல்லும் நோயாளிகளில் பெருமளவில் காணப்படுகின்றன. ஈ.என்.டி தொடர்பான மற்ற பிரச்சனைகளான ஸ்லீப் அப்னியா (தூக்கத்தில் மூச்சுத்திணறல், ஆசிட் ரிஃப்ளக்ஸ் நோய் (அமிலப் பின்னோட்ட நோய்) மற்றும் வெர்டிகோ ஆகும்.
ஈ.என்.டி தொடர்பாக நாம் நிராகரிக்கக்கூடாத முக்கியமான அறிகுறிகளில் ஒன்று 2 வாரங்களுக்கு மேல் நீடிக்கும் கழுத்துபகுதியில் உள்ள ஒரு கட்டியாகும். இது வாய் அல்லது தொண்டை புற்றுநோய் அல்லது லிம்போமாவின் ஒரு பகுதியாக அதாவது நிணநீர் மண்டலத்தை பாதிக்கும் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாக இருக்கலாம். இவை உட்புறம் மேலும் பரவி இயல்பாக சுவாசிப்பதைக் கூட பாதிக்கலாம். அத்தகைய அறிகுறிகளைக் கவனித்தவுடன் அது குறித்து உடனடியாக ஒரு ஈஎன்டி மருத்துவரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
ஆம்பூரில் உள்ள சிறந்த ஈஎன்டி மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.என்.யு மருத்துவமனைகளில் உள்ள ஈஎன்டி பிரிவு, அதன் உயர்தர ஈஎன்டி பராமரிப்பு மூலம் சுகாதாரத்தை மறுவரையறை செய்துள்ளது. ஈஎன்டி மருத்துவர்கள் ஒரு சிறந்த நர்சிங் மற்றும் மருத்துவ ஊழியர்களின் ஆதரவுடன் நோயாளிகளைக் குணப்படுத்த தங்கள் அன்பு மற்றும் நிபுணத்துவத்துடன், கஷ்டத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகளின் முகங்களில் புன்னகையைக் கொண்டு வந்துள்ளனர்.