இதயம் நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும். நுரையீரல், மூளை மற்றும் சிறுநீரகங்களுடன் கூட, ஆரோக்கியமான இதயம் நாம் உயிர் வாழ்வதற்கு மிகவும் அவசியம். இதயம் 24/7, 365 நாட்கள் இடைவிடாது உழைக்கும் போது, அது இயல்புக்கு மாறான நிலைமைகள் மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாகக்கூடும். இது மாரடைப்பு உள்ளிட்ட பெரிய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். எனவே இதயத்தின் செயல்பாட்டை தொடர்ந்து கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும்.
இதயம் தொடர்பான சிறிய அறிகுறிகள் இருந்தாலும், எந்த அறிகுறிகளையும் நிராகரிக்காமல், உடனடியாக ஒரு இதய நோய் நிபுணரின் கருத்தைக் கோருவது அவசியம். அந்த மனக்கவலையுள்ள தருணங்களில், உங்களை டென்ஷனாக்காமல் சாவகாசமாகவும் நம்பிக்கையுடனும் வைத்திருக்கக்கூடிய ஒரு இதய நிபுணரின் சேவைகளை நாடுவது அவசியம். இந்த விஷயத்தில் ஆம்பூரில் உள்ள சிறந்த இதய மருத்துவமனைகளில் ஒன்றான கே.எம்.என்.யு மருத்துவமனை ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆரோக்கியமான இதயத்தைக் கெடுக்கக்கூடிய நாம் அறியக்கூடிய காரணிகளாவன புகைபிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம், நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை மற்றும் இதய நோய்கள் கொண்ட குடும்ப வரலாறு முதலியவையாகும்.
கே.எம்.என்.யு மருத்துவமனையில் மிகச் சிறந்த இதய நிபுணர்கள் கொண்ட குழு ஆம்பூரில் உள்ளது, அவர்கள் கூட்டாக கடுமையான அவசரநிலைகள் உட்பட இதயம் தொடர்பான பல்வேறு வகையான பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதில் தங்களுக்கிருக்கும் அதிக அனுபவத்தை ஒன்றுசேர்த்து பயன்படுத்துகின்றனர். நமது இதய நோய் நிபுணர்களின் நிபுணத்துவம் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் தனித்துவமான திறன்கள் தான் ஆம்பூரில் உள்ள சிறந்த இதய மருத்துவமனைகளில் ஒன்றாக இந்த மருத்துவமனையை மாற்றுகிறது.
இதய நோய்கள் உங்கள் இதயத்தை ஆபத்தில் ஆழ்த்துவதோடு மட்டுமல்லாமல், உங்கள் உடலில் உள்ள பல உறுப்புகளையும் பாதிக்கலாம். ஆரோக்கியமான மற்றும் ஓளிமயமான வாழ்க்கையை வாழ, இதயம் தொடர்பான ஒவ்வொரு அறிகுறியையும் உங்கள் இதய நோய் நிபுணருடன் பகிர்ந்து கொள்வது அவசியம். ஆம்பூரில் உள்ள இதயநோய் நிபுணர்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இயக்கப்படும் நோயறிதல் சாதனங்களின் மூலம் பிரச்சினையின் அடிமட்ட நிலைக்குச் சென்று பொருத்தமான தீர்வைக் கண்டறிவதில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்களாவர்.
இந்த மருத்துவமனையில் அவசரகால சூழ்நிலைகளுக்கு சிகிச்சையளிக்க ஏதுவாக, ஆய்வகங்கள் மற்றும் அறுவை சிகிச்சை தியேட்டர்கள் உள்ளிட்ட அதிநவீன நோயறிதல் வசதிகள் உள்ளன. ஆம்பூரில் உள்ள நமது அனுபவமிக்க இதய நிபுணர்களால் மிகுந்த கவனிப்பு மற்றும் மிகச்சரியாக சிகிச்சையளிக்கப்படும் இதயத்துடன் தொடர்புடைய சில பொதுவான உடற்பிரச்சினைகளான மாரடைப்பு, இதய செயலிழப்பு, இதயத் தமனி நோய், இதய படபடப்பு, மற்றும் வால்வுகள் தொடர்பான நோய்கள் முதலியன அடங்கும்.
ஆம்பூரில் உள்ள கே.எம்.என்.யு மருத்துவமனைகளில் உள்ள இதய நோய் நிபுணர்கள், கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி, சிஏபிஜி மற்றும் திறந்த இதய அறுவை சிகிச்சைகள் முதல் வால்வு மாற்று அறுவை சிகிச்சைகள் வரையிலான அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வதற்கான மேம்பட்ட மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கு முழுமையான பயிற்சியையும் அனுபவத்தையும் பெற்றுள்ளனர்.
ஆம்பூரில் உள்ள இந்த மிகச்சிறந்த இதய மருத்துவமனையில் உள்ள சில கூடுதல் வசதிகளில் நன்கு வடிவமைக்கப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவு மற்றும் இருதய சிகிச்சைப் பிரிவு ஆகியன அடங்கும், இவை ஆபத்தான இதய நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கத் தேவையான அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளன.
நோயாளி பராமரிப்பில் எந்த சமரச அணுகுமுறையும் கொண்டிராததற்கு இம்மருத்துவமனை புகழ்பெற்றது மற்றும் அறிவியல் அடிப்படையிலான சிகிச்சையை வழங்குவதால் இது நோயாளிகளுக்கு மனநிம்மதியை அளிக்கிறது. முடிந்தளவு சிறந்த
ஆதரவை வழங்குவதற்கு பல சிக்கலான இதய அறுவை சிகிச்சைகள் நோயாளிகளின் பட்ஜெட்டை மனதில் வைத்து செய்யப்படுகின்றன .
இருதய நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் பல பிரச்சனைகளைத் தவிர்க்கமுடியும். இதற்கு நல்ல உணவு பழக்கங்களுடன் இதயத்தின் ஆரோக்கியத்தை வழக்கமான அடிப்படையில் கண்காணிப்பது அவசியம். ஆம்பூரில் உள்ள எங்கள் அனுபவமிக்க இதய நிபுணர்கள் அனைத்து இதய பிரச்சினைகளுக்கும் முழுமையான மற்றும் குறைந்த செலவில் சிகிச்சையளிப்பதன் மூலம் நீங்கள் பலமான மற்றும் ஆரோக்கியமான இதயம் கொண்டிருப்பதை உறுதி செய்ய உறுதிபூண்டுள்ளனர்.